திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தில் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் நேரடியாக கலப்பது குறித்து, `இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று முன்தினம் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது.
இச்செய்தி குறித்த விவரங்களை தன்னார்வலர்கள் பலரும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சமூக வலைதள முகவரிகளுக்கு அனுப்பினர். இந்நிலையில் வேய்ந்தான்குளத்துக்கு நீர்வரும் வழித்தடத்தில் மாநகராட்சியின் பாதாள சாக்கடை பொங்கி வழிந்து கொண்டிருந்த பகுதியில் சீரமைப்பு பணிகளை மாநகராட் நிர்வாகம் நேற்று தற்காலிகமாக மேற்கொண்டது. கழிவு நீர் வாகனம் மூலம் பாதாள சாக்கடை கழிவு நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல்மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக கழிவுநீர் ஓடையில் கலப்பதை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிரந்தரமாக கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago