விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக திணிக்காதீர்கள் - யூரியா, டிஏபி உரத்துடன் வேறு எதையும் விற்க கூடாது : உர விற்பனையாளர்களுக்கு கடலூர் வேளாண் அதிகாரி எச்சரிக்கை

விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக எந்த மருந்துகளையும் திணிக்காதீர்கள். யூரியா, டிஏபி உரத்துடன் வேறு எதையும்விற்க கூடாது என்று கடலூர்வேளாண் இணை இயக்குநர்

பாலசுப்ரமணியன் தெரிவித்துள் ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டத்தில் இயல்பாக பெறவேண்டிய வடகிழக்கு பருவமழை அளவு 697.8 மி.மீஆகும்.

நேற்றைய தேதி வரைபெறப்பபட வேண்டிய இயல்பானமழையளவு 449.1 மி.மீ ஆனால்,இதுவரை 813.8 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நெல் 88,264 ஹெக்டர், மக்காச்சோளம் 23,626 ஹெக்டர், பருத்தி 4,033 ஹெக்டர், உளுந்து 7,820 ஹெக்டர் ஆக மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து743 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் யூரியா 3,238 மெ.டன், டி.ஏ.பி 431 மெ.டன், பொட்டாஷ் 1,577 மெ.டன், காம்ப்ளக்ஸ் 7,319 மெ.டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது.

மேலும், புதிதாக 1,150 மெ.டன் யூரியா, 557 மெ.டன் டி.ஏ.பி உரம் இரயில் மூலம் பெறப்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உர விற்பனையாளர்கள் அனைவரும் இருப்பினை ஒழுங்காக பராமரித்து, அதிகபட்ச சில்லரை விலைக்கு மிகாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். யூரியா மற்றும் டி.ஏ.பி உரத்துடன் வேறு எந்த பொருளையும் இணைத்து விவசாயிகள் விருப்பமின்றி விற்பனை செய்யக்கூடாது.

உர பதுக்கல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் வரப்பெற்றால் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்