கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக ளுக்குப் பின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவ லகத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி வாகனங்களின் தரம் குறித்து நேற்று ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு முகாமை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் பார்வையிட்டார்.
ஆய்வின் போது ஆட்சியர்கூறியது:
கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை இரு பகுதிகளிலும் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுலவகங்கள் சார்பில் மொத்தம் 108 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஓட்டுநர்களுக்கு ஏற்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையின் சார்பில் பேருந்து விபத்து காலங்களில் பேருந்து ஓட்டுநர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செயல்விளக்க பயிற்சிஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது என்றார். இந்த ஆய்வில் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் கே.செந்தூர்வேல், கள்ளக் குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் வி.ராஜலட்சுமி, உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்.மணிமொழியன், கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.செல்வம், உளுந்தூர்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பி.பெரியசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago