மதுரையில் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படவுள்ள முக்கியத் திட்டங்களால் மாநகரம் புதுப் பொலிவு பெறும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங் கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆலோசனை கூட்டம் உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி, சு.வெங்கடேசன் எம்பி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த ஆட்சியின்போதே 80 சதவீதம் வரை முடிந்துவிட்டது. இதனால் தேவைப்படும் மாற்றங்களை செய்ய முடியவில்லை. 13 பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பெரியார் பேருந்து நிலையத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன. இப்பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும். தொடக்க விழாவுக்கான தேதி முதல்வரிடம் கோரப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்குள் பேருந்து நிலை யம் பயன்பாட்டுக்கு வரும்.
வைகையின் இரு கரைகளிலும் கோச்சடை, கல்பாலம் உள்ளிட்ட இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படும். நத்தம் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியை முடிக்க திட்டமிட்ட காலத்தைவிட கூடுதலாக 6 மாதம் ஆகும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மக்கள் வசதியாக பயன்படுத் தும் வகையில் மேம்பாலத்தின் கீழேயுள்ள சாலையை முழுமை யாக அமைக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது. இக்கூட்டத்தில் முக்கியமான 2 துறைகளின் அதிகாரிகள் வரவில்லை. இதை அனுமதிக்க முடியாது. மதுரை நகரில் மோசமான சாலைகளை டிசம்பருக்குள் சீரமைக்க ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கப் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி களை விரைவுபடுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. நகரைச் சுற்றி 23 கி.மீ. அளவில் விரிவாக்கப்பகுதி உருவாக்கப்படும். அங்கு ஏராள மான குடியிருப்புகள், தொழிற் கூட் டங்கள் அமையும். இது குறித்த அறிவிப்பு ஒரு மாதத்துக்குள் முதல்வரால் வெளியிடப்படும். 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப் படும் திட்டங்களால், இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். அப்போது மதுரை புதுப்பொலிவு பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்பிக்கள் பா.மாணிக்கம்தாகூர், ப.ரவீந்திரநாத் குமார், எம்எல்ஏ.க் கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், பெரியபுள்ளான், அய்யப்பன், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago