திருப்பரங்குன்றம் வழித்தட : பஸ்களுக்கு தனி ‘பஸ் பே’ :

By செய்திப்பிரிவு

மதுரையில் அனைத்து டவுன் பஸ்களும் பெரியார் பஸ்நிலை யத்திலிருந்தே இயக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் மட்டும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி புதிய பஸ் நிலையத்தில் 57 பஸ்கள் நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பழைய பெரியார் பஸ் நிலையத்தில் மட்டும் 54 பஸ்கள் நிறுத்த முடியும். தற்போது காம்ப்ளக்ஸ் நிலைய பஸ்களுக்கும் சேர்த்துதான் புதிய பெரியார் பஸ் நிலையம் கட்டப் பட்டுள்ளது.

இதனால் போதுமான இடவசதி இல்லாததாலும், சுற்றி வர வேண்டும் என்பதாலும் போக்குவரத்து கழக நிர்வாகம், திருப்பரங்குன்றம் வழித்தட பஸ்களை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து இயக்க மறுத்தன.

கடந்த காலத்தைப் போல், டிபிகே சாலையிலே பஸ் நிறுத்தம் கட்டித்தர வலியுறுத்தி வந்தது. இதற்கு மாநகராட்சியும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் 3 பஸ்கள் நிறுத்தும் அளவு ‘பஸ் பே’ கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ நெரிசல் ஏற்படாவிட்டால் திருப்பரங்குன்றம் பஸ்களையும் பெரியார் பஸ் நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்