7 ஆண்டுகளாக தவிக்கும் வியாபாரிகள், பொதுமக்கள் - மோசமான நிலையில் மதுரை கட்ராபாளையம் சாலை : சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

By செய்திப்பிரிவு

மதுரையின் வர்த்தகப் பகுதிகளில் ஒன்றான கட்ராபாளையம் சாலை, 7 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக, கழிவுநீரால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் இச்சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் எதிரே உள்ள கட்ராபாளையம் சாலையில் நூற்றுக்கணக்கான கடைகளும், வீடுகளும் உள்ளன. பெரியார் பஸ் நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் அருகே இந்த சாலை உள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த சாலையில் அதிகம் சென்று வருவர். 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை பேவர்பிளாக் சாலையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு அடிக்கடி தோண்டப்பட்டதால் தற்போது மேடு, பள்ளமாக கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவு மோசமான நிலையில் உள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த வணிகர் மைதீன் கூறியதாவது: பேவர் பிளாக் சாலை குறிப்பிட்ட இடத்தில் சேதமடைந்தால் முழுமையாகத் தோண்டி சீரமைக்க வேண்டும். அடிக்கடி குடிநீர் குழாய், பாதாளச் சாக்கடை பராமரிப்புக்காக தோண்டுகின்றனர். ஆனால் அதன்பிறகு சீரமைப்பதில்லை. அதனால் வியாபாரிகள், பொது மக்கள் கடும் சிரமத்துக் குள்ளாகின் றனர். மாநகராட்சி மற்றும் எம்எல்ஏ-க்களிடம் பலமுறை கூறி யும் 7 ஆண்டுகளாக சீரமைக்க நட வடிக்கை எடுக்கவில்லை என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகளிடம் கேட்டபோது, பழு தடைந்த சாலைகளை பராமரிக்கத் திட்டம் தயாராகிறது. அதில் இந்தச் சாலையும் சீரமைக்கப்படும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்