சாலை பராமரிப்புப் பணிகள் முடியாததால் மதுரை முதல் நாகர்கோவில் வரையுள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாளையங்கோட்டை வழக்க றிஞர் எஸ்.கோவிந்த், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நாகர்கோவி லிலிருந்து மதுரை வரை தேசிய நெடுஞ்சாலை எண்-7 நான்குவழிச் சாலையில் பல மாதங்களாகப் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் பல இடங் களில் நான்குவழிச் சாலை இருவழிச் சாலையாகவும், பல கி.மீ. தூரத்துக்கு ஒரு வழிச் சாலையாகவும் உள்ளது.
இதனால் சாலை சேதமடைந் துள்ளது. மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இரவில் விபத்துகள் அதிகம் நடக்கின்றன.
சென்னையில் சாலை பராம ரிப்புப் பணிகள் நடந்தபோது சுங் கக் கட்டண வசூலை தமிழக அரசு நிறுத்தியது. ஆனால், சாலை பராமரிப்புப் பணி முடியாத நிலையிலும் நாகர்கோவில் முதல் மதுரைக்கு வரும்போது மறுகால்குறிச்சி, சாலைபுதூர், எட்டூர்வட்டம், கப்பலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
எனவே, சாலை பராமரிப்புப் பணி முடியும் வரை தேசிய நெடுஞ்சாலை 7-ல் நாகர்கோவில் முதல் மதுரை வரையுள்ள 4 சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும், எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆயிரம் செல்வகுமார் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், மனு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் 4 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்படும் என்று கூறி விசா ரணையை ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago