கரோனா ஊரடங்கு காலத்தின்போது, நிறுத்தப்பட்டிருந்த சேலம்- சென்னை எழும்பூர் ரயில், டிச., 2-ம் தேதி முதல் இருமார்க்கத்திலும் வாரம் மும்முறை அதிவிரைவு ரயிலாக இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் (எண்.22153) டிச.2-ம் தேதி சென்னை எழும்பூரில் இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 6.10 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டுக்கு இரவு 12.53 மணிக்கும், விழுப்புரத்துக்கு அதிகாலை 2.13 மணிக்கும், விருத்தாசலத்துக்கு 3.05 மணிக்கும், சின்னசேலத்துக்கு 4.14 மணிக்கும், ஆத்தூருக்கு 4.39 மணிக்கும், ஏத்தாப்பூர் ரோட்டுக்கு 4.59 மணிக்கும், வாழப்பாடிக்கு 5.09 மணிக்கும், அயோத்தியாப்பட்டணத்துக்கு 5.29 மணிக்கும், சேலம் டவுனுக்கு 5.39 மணிக்கும், சேலம் ஜங்ஷனுக்கு காலை 6.10 மணிக்கும் வந்தடையும். இந்த ரயில், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், இந்த ரயில் (எண்.22154) டிச.,3-ம் தேதி சேலம் ஜங்ஷனில் இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு, அயோத்தியாப்பட்டணத்துக்கு இரவு 10.01 மணிக்கும், வாழப்பாடிக்கு இரவு 10.19 மணிக்கும், ஏத்தாப்பூர் ரோட்டுக்கு இரவு 10.29 மணிக்கும் ஆத்தூருக்கு 10.44 மணிக்கும், சின்னசேலத்துக்கு 11.09 மணிக்கும், விருத்தாசலத்துக்கு 12.10 மணிக்கும், விழுப்புரத்துக்கு 1.15 மணிக்கும், செங்கல்பட்டுக்கு 2.38 மணிக்கும், தாம்பரத்துக்கு 3.08 மணிக்கு வந்து, சென்னை எழும்பூருக்கு அதிகாலை 3.50 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் புதன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago