கரூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழப்புக்கு காரணமான வேன் பறிமுதல் : ஓட்டுநர் தலைமறைவு

மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய வேனை தாந்தோணிமலை போலீ ஸார் நேற்று பறிமுதல் செய்து, தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாள ராக பணியாற்றி வந்தவர் கனகராஜ்(57). இவர் கரூர்- திருச்சி புறவழிச்சாலையில் வெங்கக்கல் பட்டி மேம்பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியே சென்ற வேன் மோதி உயிரிழந்தார்.

இதையடுத்து, மோதிய வேனை கண்டறிய அமைக்கப்பட்ட டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான தனிப்படையினர், விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய வேன், கடவூர் பகுதியிலிருந்து ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி நிறுவனத்துக்கு தொழிலாளர்களை ஏற்றி வந்ததும், விபத்து ஏற்பட்டதால் தொழிலா ளர்களை அவரவர் வீட்டில் இறக்கிவிட்டு, வேனை கடவூர் அருகேயுள்ள ஊத்துக்குளியில் உள்ள உரிமையாளர் வீட்டில் நிறுத்தி விட்டு அதன் ஓட்டுநர் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வேனை போலீஸார் நேற்று முன்தினம் இரவு பறிமுதல் செய்து தாந்தோணிமலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் தலைமறைவான தோகைமலை அருகேயுள்ள உடையாபட்டியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சுரேஷ்(28) என்ப வரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE