173 ஊராட்சிகளில் 100 % கரோனா தடுப்பூசி : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 173 ஊராட்சிகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது. அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஆட்சியர் கவிதா ராமு பேசியது:

மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 70 சதவீதமும், 2-ம் தவணை தடுப்பூசி 34 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 173 ஊராட்சிகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டையை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக மாற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும் என்றார்.

இதைத்தொடர்ந்து, அறந்தாங்கி மற்றும் இலுப்பூரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த கூட்டத் திலும் ஆட்சியர் கலந்துகொண்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ராமு, துணை இயக்குநர்கள் அர்ஜூன்குமார், கலைவாணி, கோட்டாட்சியர்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்