அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகேயுள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் திடல் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 4 நாட்க ளுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற 55 பசுமாடுகள் கொள்ளி டத்தில் அதிகளவு தண்ணீர் செல்வதால் வெளியில் வரமுடி யாமல் திடலிலேயே தவித்து வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஜெயங் கொண்டம் தீயணைப்புத் துறையினர் மாடுகளை மீட்க முயற்சி செய்தும் பயனளிக்கா ததால், நேற்று காலை படகுகள் மூலம் பொதுமக்கள் சிலருடன் திடல் பகுதிக்கு சென்ற தீய ணைப்புத்துறை வீரர்கள், தண்ணீர் குறைவாக செல்லும் பகுதிகளுக்கு பசுமாடுகளை ஓட்டிச் சென்று, நீந்தச் செய்து கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், அவை சம்மந்தப்பட்ட விவசாயிகள் வசம் ஒப்படைக் கப்பட்டன.
இதற்காக தீயணைப்புத்துறை வீரர்களுக்கு விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago