திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக ஓய்திருந்த மழை நேற்று மீண்டும் பல்வேறு இடங்களில் பெய்தது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த4 நாட்களாக மழையின்றி வறண்டவானிலை காணப்பட்டது. வெயிலும், அவ்வப்போது மேகமூட்டமும் இருந்தது. சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை தொடங்கி ஆங்காங்கே நல்ல மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 1, சேர்வலாறு- 4 , மணிமுத்தாறு- 7.4 ,அம்பாசமுத்திரம்- 5 , சேரன்மகாதேவி- 8 , திருநெல்வேலி- 1.8. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 138.55 அடியாக இருந்தது. அணைக்கு 1,013 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 92.95 அடியாக இருந்தது. அணைக்கு 261 கனஅடி தண்ணீர் வருகிறது. 10 கனஅடி திறந்துவிடப்பட்டிருந்தது. 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்டநம்பியாறு அணை நிரம்பியிருக்கும் நிலையில், அணைக்கு வரும் 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 52.25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 50 அடியாக இருந்தது. 73 கனஅடி தண்ணீர் வருகிறது. 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 45 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணையில் 37 மி.மீ., அடவிநயினார் அணையில் 15, ஆய்க்குடியில் 6, தென்காசியில் 3.20, குண்டாறு அணையில் 2, செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான மழை பெய்தது.
கடனாநதி அணை நீர்மட்டம் 82.80 அடியாகவும், ராமநதி அணைநீர்மட்டம் 81.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 131 அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணை, குண்டாறு அணைதொடர்ந்து முழு கொள்ளளவில் இருப்பதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago