சங்கராபுரம் அருகே - மணிமுக்தாறு வெள்ளத்துக்கு நடுவே சிக்கித் தவிக்கும் கூடலூர் : அரசு அதிகாரிகள் எவரும் வரவில்லை என புகார்

By செய்திப்பிரிவு

வட கிழக்குப் பருவமழை காரணாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ளகோமுகி மற்றும் மணிமுக்தாறு நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

வெளியேற்றப்படும் உபரி நீர் விளைநிலப் பகுதி களில் புகுந்துள்ளது. இதனால் சுமார் 7 ஹெக்டேர் பரப்பளவில் மழைநீர் தேங்கியுள்ளது. நீர் நிலைகள் நிரம்பி, சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளது.

அந்த வகையில் சங்கராபுரத்தை அடுத்த சிறுகாளூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கூடலூரில் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டாம்பட்டி-கூடலூர் இடையேயான சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்ற கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியிருப்பதாக கவலை தெரிவிக்கும் கூடலூர் வாசிகள், ஊரைச் சுற்றி மணிமுக்தாறு செல்வதால், ஆற்றைக் கடந்து செல்ல முடியவில்லை என்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்கவில்லை.

மழையால் வெட்டப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கை, வியாபாரிகள் வெளிப்பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதி பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்