தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் - மழைக்கு செடிகள் அழிந்ததால் தக்காளி விலை உச்சம் : மதுரையில் சதம் அடித்தது

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மட்டுமின்றி கர்நா டகா, ஆந்திராவிலும் கன மழைக்கு தக்காளிச் செடிகள் அழிந்து போனதால் மதுரையில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்றது. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் அதிகளவு தக்காளி விற்பனைக்கு வந்தது. தற்போது தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தக்காளி, முருங்கைக் காய், கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், அவரை, பீர்க்கங்காய் உள்ளிட்ட அன்றாட சமைய லுக்குப் பயன்படுத்தப்படும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதில், தக்காளி, கத்தரிக்காய் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

வழக்கமாக தமிழகத்தில் விளையும் காய்கறிகள் மட்டு மின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க் கெட்டுக்கு தக்காளி விற் பனைக்கு வரும். தற்போது தமிழ கத்தில் மழையால் தக்காளிச் செடிகள் அழிந்துவிட்டன. கர் நாடகா, ஆந்திராவிலும் கன மழைக்கு தக்காளிச் செடிகள் அழிந்துபோயின. அதனால், அந்த மாநிலங்களில் விளையும் தக்காளி தமிழகத்தின் முக்கியச் சந்தைகளுக்கு வரத்து இன்றி நின்று போனது.

பற்றாக்குறையால் கடந்த 2 வாரமாக தக்காளி விலை அதிகரித்து, நேற்று மதுரையில் கிலோ ரூ.100 ஆக விலை உயர்ந்தது. அன்றாட சமையலில் தக்காளி அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள், தக்காளி வாங்க முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரி முருகன் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. இதேபோல் 10 நாட்கள் மழை குறைந்தால் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து விலை குறையும். இல்லாவிட்டால் தைப் பொங்கலுக்குப்பின்னர்தான் குறைய வாய்ப்புள்ளது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்