பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பாஜக வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாஜக இளைஞர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் பி.சரவணன் தலைமை வகித்தார்.
இதில் மாநில துணைத் தலை வர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, அரசு தொடர்பு பிரிவு தலைவர் ராஜ ரத்தினம், மதுரை புறநகர் பாஜக தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட துணைத்தலைவர் ஹரிகரன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன் மற்றும் நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சரவணன் பேசுகையில், பிரதமர் மோடி பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்துள்ளார். அதிக பட்சமாக பஞ்சாபில் ரூ.19 குறைக் கப்பட்டுள்ளது. தமிழக அரசு விலை குறைப்பு செய்யவில்லை. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.
ராமநாதபுரத்தில் அரண்மனை முன் பாஜக இளைஞர் அணி, மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணித் தலைவர் முனீஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளிதரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன், இளை ஞரணிச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாநில நிர்வாகிகள் சுப.நாகராஜன், சண்முகராஜ், மாவட்ட மகளிரணி தலைவர் அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சியினர், இளைஞரணியினர், மகளிரணியினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாஜகவினர் மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய் தனர். பாஜக மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டில் ஆர்ப்பாட்டம் நடந் தது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தன பாலன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார்.
காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி தலைமையிலும் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமையிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago