சேலம் மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 468 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் 41 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் 44 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் வரை 468 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 752 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 1,697 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பருவ நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல், இருமல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் நிலையில், கரோனா பரவல் அதிகரிக்காமல் தடுக்க பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும், கிருமிநாசினி பயன்படுத்தல், சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago