பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக்கோரி பாஜக-வினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பழைய நாட்டாண்மைக் கழக கட்டிம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தை, பாஜக இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்து பேசும்போது, “மத்திய அரசு பெட்ரோல் மீது ரூ.5, டீசல் மீது ரூ.10 வரி குறைத்துள்ளது. ஆனால், தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காமல் உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி ரூ.8 முதல் ரூ.15 வரி குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் பாஜக ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபு தலைமை வகித்தார். மகளிரணி தலைவி சத்தியபானு, மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் தினேஷ்குமார், மாநில இளைஞரணி செயலாளர் ஜி.வி. ஆர்.அருண், மேற்கு மாவட்ட பிரச்சார அணி தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி தலைமை தாங்கினார். பாஜக மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகரன், பொருளாளர் தீபக்ராஜா, இளைஞர் அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் சின்னதுரை, மகளிர் அணி மாவட்ட தலைவர்கள் புனிதம், கோகிலா, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன், செயலாளர் சங்கர், மூத்த நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்