அரசு பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் மனு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் வடக்கூர் பகுதி மக்கள் அரசு பேருந்து வசதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விவரம்:

கடந்த சில மாதங்களுக்குமுன் எங்கள் பகுதியில் நடைபெற்ற அசம்பாவிதத்தை காரணமாக காண்பித்து அரசு பேருந்து வசதியை நிறுத்தி வைத்துள்ளனர். பேருந்து வசதி இல்லாததால் பல கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. கோபால சமுத்திரம் தெற்கூருக்கு பேருந்து வந்து செல்கிறது. இதுபோல், நரசிங்கநல்லூருக்கும் பேருந்து வசதி உள்ளது. எங்கள் பகுதி மக்களின் கஷ்டங்களை உணர்ந்து அரசு பேருந்து வசதியை மீண்டும் ஏற்படுத்தி தரவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை கோட்டூர் சாலை பெரியபாளையம் வெட்டு வான்குளம் பாசன விவசாயிகள் அளித்த மனு:

பாளையங்கோட்டை வெட்டு வான்குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்த குளத்தின் மறுகால் தென் மேற்கில் உள்ளது. இதை மறித்து வீடு கட்டியுள்ளனர். அதேநேரத்தில் குளத்தின் வடமேற்கில் கரையை உடைத்து தண்ணீர் பாளையங்கால்வாக்கு செல்லு மாறு செய்துள்ளனர்.

இதனால், குளத்தில் தண்ணீர் இருப்பு குறைந்து பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலையுள்ளது. குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயம் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது 17 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வழங் கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமார தாஸ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்