மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு வரையறை செய்யப்பட்ட தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக கட்சிகள் மற்றும் அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இந்த வார்டு வரையறையை ரத்து செய்யக் கோரி, மேலப்பாளையத்தில் நேற்று முழுஅளவில் கடையடைப்பு செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இங்கு அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மற்றும் ஆவின் பாலகம் மட்டுமே திறந்திருந்தன. வங்கிகளும், பள்ளிகளும் வழக்கம்போல் செயல்பட்டன. கார், ஆட்டோ, பேருந்துகள் இயங்கின. இந்த போராட்டத்துக்கு மேலப் பாளையத்திலுள்ள அனைத்து கட்சிகள், அனைத்து ஜமாத்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மேலப்பாளையம் மண்டலத்தில் ஏற்கெனவே இருந்ததுபோல் மாநகராட்சி வார்டுகள் பிரிக்கப்பட வேண்டும். நகர்ப்புறத்தில் 10 வார்டுகள், வெளியே 4 வார்டுகள் இருப்பதுபோல் பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி, மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago