வேளாண் அதிகாரிகளை கண்டித்து - செய்யாற்றில் விவசாயிகள் நூதன போராட்டம் :

By செய்திப்பிரிவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு கொடுக்கப்படும் மனுக் களை வேளாண் துறை அதிகாரிகள் பெற மறுப்பதாக கூறி தி.மலைமாவட்டம் செய்யாறு கோட்டாட் சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழவர் பேரவை சார்பில் நடைபெற்ற நூதனப் போராட் டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும் போது, “செய்யாறு வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் சம்பா சாகுபடி செய்யப் பட்டடிருந்தது. நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் உட்பட அனைத்து பயிர்களும், தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், செய்யாறு வட்டத்தில் கணக் கெடுப்பு பணி தாமதமாக நடை பெறுகிறது என விவசாயிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது.

இதற்கிடையில், வெள்ள நிவாரணம் கேட்டு மனு கொடுக்க சென்ற விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளை வேளாண் அதிகாரிகள் அவமதித்து வருகின்றனர். ஊடகங்கள் மூலமாக நிவாரணம் பெற்று கொள்ளுங்கள் எனக் கூறி, மனுவை வாங்க மறுக்கின்றனர். மனுக்களை பெறும் காலத்தை நீட்டிக்க வேண்டும், வேளாண் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பின்னர், வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆடு, மாடு போல் நடந்து சென்று விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்