பயணிகள் வருகையின்றி களையிழந்த ஏற்காடு :

By செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்துள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியும் உள்ளன.

தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா செல்ல மக்கள் ஆர்வம்செலுத்தவில்லை. இதன் காரணமாக, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களான நேற்றும், நேற்று முன்தினமும் ஏற்காட்டில் பயணிகள் வருகை குறைந்தது.

இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:

கடந்த இரு வாரங்களாக, சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. ஏற்காட்டில் பெய்த கனமழையால், சேலம்-ஏற்காடு, குப்பனூர்- ஏற்காடுமலைப்பாதையில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழையால், மக்கள் சுற்றுலா செல்வதை தவிர்த்துள்ளனர். இதன் காரணமாக, ஏற்காட்டுக்குபயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால், பயணிகள் இன்றி வெறிச் சோடிக் காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்