கட்டிடத் தொழிலாளர் சங்க (ஏஐடியுசி) மாநாடு சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது. ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார்.
தமிழ்நாடுகட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் ரூ.4000 கோடி நிதி உள்ளது. இந்த நிதி கட்டுமானப் பணியினை மேற்கொள்வோர், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக வழங்கிய நிதியாகும். தொழிலாளர் நல வாரியம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாகவே ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாயை மட்டுமே அளித்து வருகிறது. இதனை மாதம் ரூ.6000 என அதிகரித்து வழங்க வேண்டும்.
பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு எவ்வித நிதிச்சுமை ஏற்படாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago