புவனகிரி அருகே வண்டுராயன் பட்டில் உள்ள வேளாண் விரி வாக்க மையத்தில் தீப்பிடித்து முக்கிய ஆவணங்கள் கருகியது.
புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு கிராமத்தில் புவனகிரி வட்டார வேளாண் விரிவாக்க மையம் உள்ளது.
இதில் வட்டார வேளாண் உதவி இயக்குநராக வெங்கடேசன் உள்ளார். இந்த விரிவாக்க மையத்தில் முக்கிய ஆவணங்கள் இருந்த இரும்பு பீரோ திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அலுவலக காவலரின் அலறல் சத்தம் கேட்டு அக்கிராம மக்கள் ஓடி சென்று தீயை அணைத்துள்ளனர்.
இதில் பீரோவில் இருந்த அனைத்து முக்கியமான ஆவ ணங்கள், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயிகள் விண்ணப்பித்த உரமானிய விண்ணப் பம், பயிர் காப்பீடு விண்ணப்பம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடகிய மனு, மானியம் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள், கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க் ஆகியவை தீயில் எரிந்து கருகின. பீரோவில் பின் பகுதியில் இருந்த வயர் மூலம் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் விவசாயிகளின் முக்கிய ஆவணங்கள் எரிந்ததால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago