விழுப்புரம் மாவட்டத்தில் - 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் : அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வானூர் சட்டமன்ற தொகுதியில் தென்கோடிப்பாக்கம், உப்புவேலூர், நல்லாவூர் ஆகிய ஊராட்சிகளில் கரோனா தடுப்பூசி முகாம்களை தொடக்கி வைத்த அமைச்சர் பொன்முடி கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 73 சதவீதத்தினருக்கும், 2-ம் கட்ட தடுப்பூசி 32 சதவீதத்தினற்கும் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

முகாம் தொடக்க நிகழ்ச்சியில் நா.புகழேந்தி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் த.மோகன், மாவட்ட துணைச் செயலாளர் செ.புஷ் பராஜ், மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்