விழுப்புரம் மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 20,644 ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் விளை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. மாவட்டத்தில் 2,29,550 ஹெக்டேர் பயிர் சாகுபடி பரப்பளவு. இதில்சம்பா சாகுபடி 71,244 ஹெக்டே ரிலும், 11,781 ஹெக்டேரில் கரும்பும், 2,930 ஹெக்டேரில் பயறு வகைகள் என 87,704 ஹெக்டேரில் சாகுபடி நடைபெறுகிறது.
இதில் 61,460 ஹெக்டேர் விளை நிலங்களுக்கு 72,522 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருப்பதாக வேளாண் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாவட்டம் முழுவதும் 20,644 ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 1,060 மி.மீட்டர். ஆனால் இந்த ஆண்டு 1,445 மி.மீட்டர் மழை பெய்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பயிர் சேத விபரம் குறித்து வருவாய் மற்றும் வேளாண் துறையினர் கணக்கெடுத்து வருவதால் பயிர் சேதம் விபரங்கள் ஓரிரு தினங்களில் தெரியவரும் என்கின்றனர் வேளாண் துறை அலுவலர்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago