போலி ஆவணம் மூலம் சொத்து அபகரிப்பு - பெண் காவலர் பணியிடை நீக்கம் :

போலி ஆவணம் மூலம் தாயார் பெயரில் இருந்த சொத்து, பணத்தை அபகரித்த தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார்.

மதுரை மாவட்டம், ஆலாத் தூரைச் சேர்ந்தவர் ஜீவா (46). இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸிடம் அளித்த புகார் மனு:

எனது தாயார் உடல்நலக் குறைவால் பிப்.2-ல் இறந்து விட்டார். அவரது பெயரில் கருவனூரில் இருந்த சொத்துகள் மூலம் கிடைத்த பணத்தை ஊமச்சி குளம், விசாலாட்சிபுரத்தில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் ஆனையூர் வடக்குத் தெருவில் வசித்துவரும் எனது சகோதரியும், காவலருமான வீரதங்காள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளார். தாயார் இறந்த நாளன்று கூட, ரூ.1.60 லட்சத்தை வங்கிக் காசோலை மூலம் எடுத்துள்ளார்.

மேலும், அவர் இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக குறிப்பிட்ட சொத்தை, தாயார் அவரது பெயருக்கு உயில் எழுதிக் கொடுத்ததாக போலி ஆவணம் தயாரித்துள்ளார். இதற்கு உற வினர் முருகன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இது பற்றி நானும், மற்றொரு சகோதரியான கற்பகதேவியும் கேட்டபோது, தான் போலீஸ் எனக் கூறி எங்களை மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உடந்தையாக இருந்த முருகன் மீதும் வழக்குப் பதிய வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக ஆய்வாளர் சுதந்திராதேவி கடந்த 8-ம் தேதி வழக்குப் பதிவு செய்தார். இதன் அடிப்படையில், வீரதங்காளை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE