சோழவந்தான், வாடிப்பட்டியில் : பேரூராட்சிகள் ஆணையர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

சோழவந்தான், வாடிப்பட்டி பேரூ ராட்சிகளில் சென்னை பேரூராட்சி கள் ஆணையர் ரா.செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவ கங்கை மாவட்டங்களில் பேரூராட்சிப் பகுதிகளில் நிறை வேற்றப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பேரூராட்சிகள் உதவி இயக்கு நர்கள், செயல் அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி இளநிலைப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பேரூராட்சிகள் ஆணையர் ரா.செல்வராஜ் சோழவந்தான், வாடிப்பட்டி பேரூ ராட்சிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் வீடு வீடாக குப்பைகளை சேகரிக் கும்போது மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்துச் சேகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் கால நிர்ணய அட்ட வணைப்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சோழவந்தானில் ரூ1.50 கோடியில் கட்டி முடிக்கப் பட்டுள்ள சந்தையை எப்போதும் தூய்மையாகப் பராமரிக்கவும், புதிய பேருந்து நிலைய கட்டு மானப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு வாடிப்பட்டி பேரூராட்சியில் நல்லான் ஊருணியில் மரக்கன்று நட்டார்.

பேரூராட்சிகளின் இணை இயக்குநர் மலையமான் திருமுடிக் காரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், செயற் பொறியாளர் சாய்ராஜ், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர்கள் ஜீலான்பானு, சண்முகம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்