இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை : மீனவர்களிடம் இலங்கைக்கான இந்திய தூதர் உறுதி

இலங்கை அரசு பறிமுதல் செய் துள்ள தமிழக மீனவர்களின் படகு களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே மீனவர்களிடம் உறுதியளித்தார்.

தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் செய் துள்ள வசதிகளை அறிவதற் காக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே நேற்று ராமேசுவரம் வந்தார். தனுஷ்கோடி பாலப் பகுதியில் வசிக்கும் மீனவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் குசலேந்திர குமார், மீன் வளம் மற்றும் மீனவர் நல கூடுதல் ஆணையர் சச்ஜன் சிங் ஆர்.சவான், ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத், மீன்வளத் துறை கூடுதல் இயக் குநர் ஜி.ஆறுமுகம், ராமநாதபுரம் துணை இயக்குநர் காத்தவராயன் உடன் இருந்தனர்.

அதையடுத்து தூதர் கோபால் பாக்லே, ராமேசுவரத்தில் மீனவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி னார். இதுகுறித்து விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகி என்.ஜெ.போஸ் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:

இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவது, படகு, உடைமைகளை சேதப்படுத்துவது, இலங்கை அரசால் பறிமுதல் செய் யப்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்து தூதரிடம் தெரிவித்தோம்.

இந்திய தூதர் பேசும்போது, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ள படகுகளை விடுவிப்பது, சேதமடைந்த படகுகளை ஏலம் விடுவது குறித்து தமிழக அரசு அதிகாரிகளை அழைத்துச் சென்று பேசி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இவ்வாறு போஸ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE