ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா பருவத் தில் இதுவரை 1,30,585 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை யடைந்தனர். இந்நிலையில் தற்போது 1,000 டன் யூரியா வந்துள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் டாம்.பி.சைலஸ் கூறியதாவது: வேளாண் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், ராமநாதபுரம் ஆட்சியர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இப்கோ நிறுவனத்தின் 1,000 டன் யூரியா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்துள்ளது. விவசாயிகள் யூரியா உரத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ள லாம்.
யூரியா 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.266.50, டிஏபி 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1,200 என்ற விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago