பெரம்பலூர் அருகே தனியாருக்கு சொந்தமான கறிக்கோழிப் பண்ணைக் குள் வெள்ளம் புகுந்ததால் 3,500 கறிக் கோழிகள் உயிரிழந்துள்ளன.
திருச்சி மாவட்டம் பச்சைமலை பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால், பச்சை மலையிலிருந்து வழிந்தோடிய மழை நீர் காட்டாறுகள், நீரோடைகள் வழி யாக பெரம்பலூர் மாவட்டத்துக்குள் புகுந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் பெய்த பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்த மழைநீர் தாழ்வான பகுதிகளை நோக்கி கரைபுரண்டு ஓடியது. கல்லாறு, மருதையாறு, வெள்ளாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இந்த ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க மாவட்ட நிர்வாக ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் நேற்று அதிகாலை செல்வராஜ் மனைவி கலையரசி(38) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்குள் புகுந்தது. 4 ஆயிரம் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டுவந்த இக்கோழிப் பண்ணையில் 3,500 கோழிகள் மழைநீரில் மூழ்கி உயிரிழந்தன. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago