அரியலூர் மாவட்டத்தில் - மழையால் 987 வீடுகள் சேதம் :

அரியலூர் மாவட்டத்தில், பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை 987 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் சராசரி அளவைக் காட்டிலும் நிகழாண்டு 6 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 2,477 ஏரி மற்றும் குளங்களில் 288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

மழையின் காரணமாக மாவட் டத்தில் 987 வீடுகள் சேதமடைந் துள்ளன. இதில், 655 குடிசை வீடுகள் பகுதியாகவும், 20 குடிசை வீடுகள் முழுமையாகவும், 300 ஓடு மற்றும் இதர வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. வீடு சேதமடைந்ததற்கு நிவாரணமாக இதுவரை 184 பயனாளிகளுக்கு ரூ.9.57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், மழை காரணமாக உயிரிழந்த 9 கால்நடைகளுக்கு ரூ.80 ஆயிரம், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் 342 பேருக்கு நிவாரணம் வழங்குவதற் கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பருவமழை காரணமாக அரிய லூர் மாவட்டத்தில் 217.55 ஹெக் டேர் நெற் பயிரும், 56.68 ஹெக்டேர் சோளம், கம்பு பயிர்களும், 14.24 ஹெக்டேர் பருப்பு வகை பயிர்களும், 1,588.18 ஹெக்டேர் பருத்தியும் முழுமையாக சேதமடைந்துள்ளன என ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE