பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் :

கரூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கரூர் அருகேயுள்ள அரசு காலனி பகுதியைச் சேர்ந்த 17 வயது தனியார் பள்ளி மாணவி கடந்த 19-ம்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதத்தில், பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் இவ்வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்றுமுன்தினம் மாற்றினார். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி நேற்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்