மேலப்பாளையம் தாய் நகர் அருகே சாலையோரம் தேங்கிக் கிடக்கும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 29-வது வார்டுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி ரோடு, தாய்நகர் அருகே கடந்த ஒரு வாரமாக மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீர் தேங்கியுள்ள பகுதி அருகிலேயே குப்பைகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் ரெட்டியார்பட்டி சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நடந்து செல்பவர்கள் நிலை பரிதாபத்துக்குரியது.
இப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தைகள் கழிவு நீரில் இறங்கித்தான் செல்கிறார்கள். இதனால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சாலையோரத்தில் தேங்கியுள்ள கழிவுநீர், குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago