கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வேலங்காடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார் பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘வடகிழக்கு பருவமழையால் கால்நடைகளுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாக்க சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இது போன்ற மருத்துவ முகாம் நடைபெறும். ஆகவே, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இம் முகாம்களில் கலந்து கொண்டு தாங்கள் வளர்க்கக்கூடிய கால் நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இது மட்டுமின்றி செயற்கை முறையில் கருத்தரிப்பு, குடற்புழு நீக்கல், சினை பிடித்தல், பால் உற்பத்தி, கால்நடைகள் வளர்ச்சிப்பெற தாது உப்பு வழங்கப்படுகிறது. இதையும் கால் நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நவநீதிகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்