பிரதமரின் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு வேளாண் பல்கலை மாணவர்கள் தேர்வு :

கோவை: பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சி உதவித்தொகைக்கு கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘உயர் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆராய்ச்சி (முனைவர்) பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நானோ தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த மாணவர் பிரதீப், மாணவி சண்முகப்பிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையின் மூலம் ஆளில்லா விமானம் மூலம் நானோ உர உருவாக்கம், பயிர்களினூடே ஊடுருவிச் செலுத்தும் முறை, தாவர நூற்புழு பூஞ்சை நோய்க்கிருமிகளை நிர்வகிக்க நானோ உயிர் கலப்பின நோய்க்கிருமிகளை பயன்படுத்துதல் ஆகிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,’’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE