திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடக்கிறது :

கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் (மாநகர் கிழக்கு), பையா என்ற ஆர்.கிருஷ்ணன் (மாநகர் மேற்கு), சி.ஆர்.ராமச்சந்திரன் (மாவட்டம் வடக்கு), எஸ்.சேனாதிபதி (மாவட்டம் கிழக்கு), வரதராஜன் (மாவட்டம் தெற்கு) ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை சிட்ரா அருகேயுள்ள, சுகுணா ஆடிட்டோரியத்தில், ஒருங்கிணைந்த திமுக கோவை மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டம் இன்று (நவ.21) காலை 7 மணிக்கு நடக்கிறது. கோவை மாவட்டப் பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் தலைமைக் கழக, நகரக்கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் கழக செயலர்கள், பொறுப்பாளர்கள், வட்டக்கழக செயலர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும். தமிழக முதல்வர் கோவை வருகை தொடர்பாக இக்கூட்டம் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE