மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் மூலம் 3 ஏரிகள் நிரம்பின :

By செய்திப்பிரிவு

மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 3 ஏரிகள் நிரம்பியுள்ளன.

மேட்டூர் அணையின் உபரிநீரைப் பயன்படுத்தி சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீர் நிரப்ப மேட்டூர் உபரிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

இதற்காக அணை இடது கரையில் உள்ள திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 கிமீ தொலைவில் உள்ள காளிப்பட்டி ஏரிக்கு உபரிநீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அடுத்தடுத்துள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கடந்த 16-ம் தேதி திம்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

நீரேற்று நிலையத்தில் இருந்து விநாடிக்கு 24 கனஅடி தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டது.

தற்போது, எம்.காளிப்பட்டி ஏரி, ராயப்பன் ஏரி, சின்னஏரி ஆகிய 3 ஏரிகள் நிரம்பிய நிலையில், மானாத்தாள் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்