புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை - ஆரியபாளையத்தில் புதிய ஆற்றுப் பாலம் கட்டுவோம் : திட்ட வரைவு தயாராக இருப்பதாக ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சங்கராபரணி ஆற்றுப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்தப் பகுதியில் உயரமான புதிய பாலத்தை கட்ட இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஆரியபாளையம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மதிய உணவு பரிமாறினார். தொடர்ந்து சிறுவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். அவர்களுடன் கலந்துரையாடி, சிறுவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ் சாலையில் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆரியபாளையம் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது இருக்கும் பாலம் உயரம் குறைவாக இருப்பதால் புதிய பாலம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கான திட்ட வரைவு தயாராக இருக்கிறது. அபாயக ரமான சூழல்களைத் தடுக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்படும்.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய குழு மழை பாதிப்புகளை மதிப்பிட நாளை (நவ. 22) புதுச்சேரி வருகிறது. மத்திய குழுவை அழைத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார். நானும், முதல்வரும் அவர்களை சந்திக்க இருக்கிறோம்.

கடல் அரிப்பு

சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடல்சார் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள கேட்டிருக்கிறோம்.

வெள்ள நிவாரண முகாமில் உணவு உண்பதை தவிர்த்த ஆட்சியர்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஆரியபாளையம் கிராமத்தில். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமை நேற்று பார்வையிடச் சென்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பரிமாறி விட்டு, முகாமில் இருந்த சிறுவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது ஆளுநரின் அருகில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா ஆகியோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அந்த உணவை அவர்கள் உண்ணாமல் அப்படியே வைத்திருந்தனர். சிறிது நேரத்தில் உடன் வந்தவர்களிடம் உணவை கொடுத்து விட்டு, ஆளுநர் புறப்பட்டவுடன் அவர்களும் அங்கிருந்து கிளம்பினர். ஆட்சியர், துணை ஆட்சியரின் இந்த செயல் முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு முன்னால் உடனடியாக கற்கள் மற்றும் மணல் கொட்டி மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களை நானும், முதல் வரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். என்னென்ன உதவிகள் வேண்டும் என்பதையும் கவனித்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

பாலத்தில் மீண்டும் போக்குவரத்து

இதற்கிடையே சங்கரா பரணி ஆற்றில் நேற்று வெள்ளநீர் குறைந்து, ஆரியபாளையம் மேம்பாலத்தின் கீழே இறங்கியது.

இதையடுத்து வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், பொதுப் பணித்துறையினர் ஆற்றுப் பாலத்தில் தேங்கிய சேறுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

இப்பணிகள் நிறைவடைந்து நேற்று மாலை முதல் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களின் போக்குவரத்து தொடங்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE