சிவகங்கை மாவட்டத்தில் - அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் உர விநியோகம் : விவசாயிகள், அதிகாரிகள் குழு அமைக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உர விநியோகம் அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதால் விவசாயி களுக்கு உரங்கள் முறையாக கிடைக்கவில்லை. இதையடுத்து விவசாயிகள், அதிகாரிகள் குழு அமைக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்டம் முழு வதும் யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் கிடைக்காததால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளில் இருந்து வாங்கிச் செல்கின்றனர். மேலும் கூட்டுறவு சங்கங்களில் உர விநியோகம் அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. சில இடங்களில் அவர்களது வீடுகளுக்கு விவசாயிகளை வரவழைத்து டோக்கன் தருகின்றனர். இதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்குகின்றனர். பல இடங் களில் கூட்டுறவுச் சங்கங்களில் உர மூட்டைகளை இறக்காமல் வெளி யிடங்களில் இறக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தினமும் ஆங்காங்கே விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சினையைத் தீர்க்க கடந்த காலங்களைப்போல் விவசாயிகள், அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும். வருவாய்த் துறை அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வைகைப் பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: தேவையான உரங் கள் இருப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. ஆனால் உரங் களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சிலர் உரங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதைத் தடுக்க விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கூறினார்.

வேளாண் துணை இயக்குநர் (உரங்கள் தரக்கட்டுப்பாடு) பரமேஸ் வரன் கூறியதாவது:

தற்போது 700 டன் யூரியா இருப்பு உள்ளது. காம்ப்ளக்ஸ் 2,000 டன், பொட்டாஷ் 200 டன் இருப்பு உள்ளது. மேலும் 700 டன் யூரியா ஓரிரு நாளில் வருகிறது. இதுதவிர அடுத்த வாரம் 2,000 டன் வருகிறது. தேவைக்கு ஏற்ப கூட்டுறவுச் சங்கங்களுக்கு உரங்களை வழங்கி வருகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்