முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் 4 மாதத்தில் நிறைவடையும் : நகராட்சி நிர்வாக இயக்குநர் உறுதி

By செய்திப்பிரிவு

முல்லை பெரியார் குடிநீர் திட்டம் 4 மாதத்தில் நிறைவடையும், ’’ என நகராட்சி நிர்வாக இயக்குநர் பா. பொன்னையா தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சியில் நடந்துவரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் அம்ரூத் பணிகளை நகராட்சி நி்ரவாக இயக்குநர் பா.பொன்னையா, மாநகராட்சி ஆணையாளர் க.பா. கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில், பெரியார் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தபிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரியார் பஸ்நிலைய கட்டுமானப் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விரைவில் திறப்பதற்கு தயாராக உள்ளது. முல்லை பெரியாறு அணை குடிநீர் திட்டப் பணிகள் 4 முதல் 5 மாதங்களில் முடிவடையும். முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தில் அந்த அணையில் சிறிய தடுப்பணையை கட்டி, அங்கிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என ஆய்வு செய்தேன். பணிகளை பொறுத்தவரையில் எந்த பிரச்சினையும் இல்லை. சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு சில உத்தரவுகளை வழங்கி உள்ளோம்.

பெரியார் பஸ்நிலையத்தில் பழைய வரைப்பட அடிப்படையிலேயே கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்