திருமங்கலம் சாத்தங்குடியைச் சேர்ந்த சுதாதேவி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் சாத்தங்குடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. மேற்குத் தெருவில் உள்ள எங்களது பட்டா நிலத்திலும் சாலை அமைக்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் சாலை அமைத்தால் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எந்த தீர்மானமும் இல்லாமல் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
சிலருக்கு சாதகமாக வேண்டுமென்றே இப்பகுதியில் சாலை அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக முறையாக அளவீடு செய்யும் பணி நடக் கவில்லை. இது குறித்து புகார் அளித்தால் மிரட்டுகின்றனர்.
எனவே, மேற்குத் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்க தடை விதிக்க வேண் டும். இது குறித்து முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி யிருந்தார். இதை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், சாத்தங்குடி ஊராட்சித் தலை வருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசார ணயை நவ.22-க்கு தள்ளி வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago