30 கண்மாய்களுக்கு பெரியாறு நீர் திறக்காததை கண்டித்து - சிவகங்கை அருகே விவசாயிகள் திடீர் போராட்டம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே பெரியாறு கால்வாயில் இருந்து 30 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக் காததைக் கண்டித்து விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை அருகே பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் பிரவலூர், கீழப்பூங்குடி, ஒக்கூர், பேரணிப்பட்டி, காஞ்சிரங்கால், கருங்காப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பயன்பெற்று வந்தன.

இக்கண்மாய்கள் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. காலப்போக்கில் திடீரென இக்கண்மாய்கள் பெரி யாறு கால்வாய் பாசனத்தில் இருந்து விடுபட்டுள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் பிறகு 40 ஆண்டுகளாக இக்கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதில்லை.

தற்போது பெரியாறு கால்வாய் மூலம் சிவகங்கை பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு தண் ணீர் வருகிறது. மேலும் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மணிமுத்தாறு, உப்பாறு, விரிசுழியாறு போன்றவற்றில் தண்ணீர் செல்கிறது. ஆனால் அதன் அருகேயுள்ள பிரவலூர், கீழப்பூங்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.

இதனால் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் தரிசாக விடப்பட்டு ள்ளது. பெரியாறு நீர் திறக்க வலியுறுத்தி, சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சேதுராமன், சுப் பையா, கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:

எங்கள் பகுதியில் உள்ள கண்மாய்கள் ஒவ்வொன்றும் 100 ஏக்கருக்கு மேல் பரப்பு கொண் டது. இதனால் மழைநீரால் நிரம்பாது.

பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்தால் மட்டுமே நிரப்ப முடியும். எப்போது பெரியாறு கால்வாயில் இருந்து கண்மாய்கள் துண்டிக்கப்பட்டதோ அன்றில் இருந்து இதுவரை 2,000 ஏக்கர் நிலங்களும் தரிசாகவே விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து முதல்வர், அமைச்சர், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நட வடிக்கை இல்லை. இதனால் போராட்டம் நடத்துகிறோம். பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்