கிராமச் செவிலியர்கள் 185 பேர் மீது வழக்கு :

திருச்சி: மருத்துவ வழிகாட்டலுக்கு மாறாக வீடு, வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராமச் செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கரோனா பரவலைத் தடுப்பதற்கான அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றவில்லை எனவும், மனித உயிருக்கு அச்சுறுத்தலான கரோனா தொற்றைப் பரப்பும் வகையில் அலட்சியமாக இருந்ததாகவும் கிராமச் செவிலியர்கள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் காயத்ரி, நிர்வாகிகள் சித்ரா, ஜெயசுந்தரி, விமலாதேவி, சந்திரா உள்ளிட்ட 185 பேர் மீது கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE