இயல்புக்கு அதிகமான மழைப்பொழிவு இருந்தபோதும் - தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் மாஞ்சக் கண்மாய் :

ஆலங்குடி அருகே நிகழாண்டு இயல் புக்கு அதிகமாக மழைப் பொழிவு இருந்தபோதும், மாஞ்சக் கண்மாய் வறண்டு கிடப்பது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாஞ்சான் விடுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் மாஞ்சக் கண்மாய் உள்ளது. பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்தக் கண்மாய்க்கு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீர் வரும்.

இந்நிலையில், நிகழாண்டில் இயல்பைவிட அதிகமாக மழைப் பொழிவு இருந்தும்கூட இந்தக் கண்மாய் வறண்டு கிடப்பது இப்பகுதி விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: வனப்பகுதியில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்களை வளர்ப்பதற்காக வனத்தோட் டக் கழகத்தினர் தடுப்புகளை ஏற்படுத் தியதால், கண்மாய்க்கு தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு குடிமராமத்து திட்டத் தில் கண்மாயின் கிழக்கு கரை மட்டும் பலப்படுத்தப்பட்டது. ஆனால், மதகுகள் சீரமைக்கப்படவில்லை.

நிகழாண்டு, இயல்புக்கும் அதிகமாக மழை பெய்தும்கூட கண்மாய் வறண்டு, விளையாட்டுத் திடலாக காட்சியளிப் பது வேதனை அளிக்கிறது. எனவே, கண்மாய் முழுவதையும் தூர்வாரு வதுடன், வனப்பகுதியில் அமைக் கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE