தென்காசி வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
கோட்டாட்சியர் ராமச்சந்திரன், தென்காசி டிஎஸ்பி மணிமாறன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். 95 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தீயணைப்பு உபகரணம், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, முதலுதவிப்பெட்டி, படிக்கட்டு உயரம், சிசிடிவி கேமரா, வாகன இருக்கைகள், கதவுகள் உட்பட 16 வகையான சோதனைகள் செய்யப்பட்டன. அவற்றில் 25 வாகனங்களில் சில குறைபாடுகள் கண்டறியப் பட்டன. அவற்றை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அந்த குறைகளை 2 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுவந்து, ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டனர். உரிய விதிமுறை களை பின்பற்றாததால் 2 வாகனங்களுக்கு தகுதிச் சான்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago