நீலகிரி மாவட்டம் உதகைக்கு மேட்டுப்பாளையம் மற்றும் பல்வேறு சமவெளிப் பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், விவசாய நிலங்களும், காய்கறி உள்ளிட்டபயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த 17-ம் தேதி ரூ. 80-க்கு விற்ற ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.100-க்கும், ரூ.60-க்கு விற்ற கத்திரிக்காய் ரூ.120-க்கும், ரூ.50-க்கு விற்ற பெரியவெங்காயம் ரூ.70-க்கும், தக்காளி ரூ.80-க்கும் விற்பனையாகின.இதேபோல, பீர்க்கன் காய், சின்னவெங்காயம், புடலங்காய் உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், நூற்கோல், டர்னாபிஸ், முள்ளங்கி, முட்டைகோஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் வெள்ளத்தில் மூழ்கி, விளைநிலங்களிலேயே சேதமடைந்துள்ளன.இவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.இதற்கிடையே மாவட்டத்தில்தொடர்ந்து பெய்து வரும் மழையால் விளைநிலங்களோடு 13 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago