காங்கயம்: கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, காங்கயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று மகா தீபம் ஏற்றப்பட்டது.
நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு விழா பூஜை தொடங்கியது. காலை 9 மணிக்கு காலசாந்தி பூஜையும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனையும், 5.30 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. மாலை 6.20 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல காங்கயம் காசி விஸ்வநாதர் கோயில், காடையூர் காடேஸ்வரர் கோயில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோயில், மடவிளாகம் ஆருத்ரகபாலீஸ்வரர் கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயில் உட்படபல்வேறு கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கரோனா தொற்று பரவல் காரணமாக மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago