வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் மதுரை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின.
தென் மாவட்டத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிர மடைந்துள்ளதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளது. 2,300 கன அடி நீர் வைகை அணைக்கு திறக் கப்படுகிறது. அதனால், வைகை அணை நீர்மட்டம் 70 அடியைத் தொட்டுள்ளது.
அணைக்கு விநாடிக்கு 3,294 கன அடி நீர் வருவதால் ஆற்றில் 4,420 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது.
அதனால், வைகை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இதன் காரணமாக மதுரை யானைக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
ஏற்கெனவே ஒபுளா படித்துறை, குருவிக்காரன் சாலை தரைப் பாலங்கள் இடிக்கப்பட்டு மேம் பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது. யானைக்கல் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் மதுரை நகரின் வடகரை, தென்கரை பகுதி மக்கள் மேம்பாலங்களை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago