பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி சுஜீத் குமார் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணிபுரிந்த பா.மூர்த்தி, சென்னை சிபிசிஐடி(எஸ்ஐடி)-க்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட சுஜீத் குமார் திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி.யாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் கூறியபோது, “மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். மணல் திருட்டு, கஞ்சா, குட்கா, லாட்டரி, மது விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து, “சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றங்களைக் குறைப்பதிலும் பொதுமக்களுடன் அனைத்து காவல் அதிகாரிகளும் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரக்கூடிய புகார்களுக்கு கட்டாயம் மனு ரசீது அளிக்க வேண்டும் அல்லது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்டத்தில் பணிபுரியும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் எஸ்.பி சுஜீத் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்