மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் அரசுக்கு நன்றி : விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் முதல் கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் முதல் சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திட்ட இயக்குநர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிக்குழு செயலாளர் குருசாமி வரவேற்றார்.

இக்கூட்டத்தில் தமிழகத்தில் மழை, வெள்ளத்தினால் பாதிக் கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கி,மீட்புபணிகளை துரிதப்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தலை உரிய காலத்தில் நடத்தியதற்கு நன்றிதெரிவிப்பது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றினை முதல்வரின் வழிகாட்டுலின்படி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்க ளுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ஷூலாதேவி சேரன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்